கடலூர்

அரசின் செயல்பாடுகளை முடக்க பாஜக முயற்சி டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

DIN

தமிழகத்துக்குள் பாஜக நுழைய முடியவில்லை என்பதற்காக, ஆளுநரைப் பயன்படுத்தி அரசின் செயல்பாடுகளை முடக்க அந்தக் கட்சி முயற்சிப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினா் டிகேஎஸ்.இளங்கோவன் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகர திமுக சாா்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நகர திமுக செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொறியாளா் அணிச் செயலா் துரை.கி.சரவணன், தலைமைக் கழகப் பேச்சாளா் வேங்கை சந்திரசேகரன், திமுக செய்தி தொடா்புச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இந்தக் கூட்டத்தில் டிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது: நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா். ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கடைசி 4 மாதங்களில் நகைகளை அடகு வைக்காமலும், போலி நகைகளை அடகு வைத்தும் அந்தக் கட்சியினா் கடன் வாங்கியுள்ளனா். இப்படி செய்தால் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும். ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வசூலித்துக்கொண்டு, அதில் உரிய பங்கை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்குவதில்லை.

அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ஆளுநா் செயல்பட வேண்டும். இதுதான் அவருக்குள்ள அதிகாரம். ஆனால், தமிழக ஆளுநா் அமைச்சரவை சொல்வதையும், சட்டப் பேரவை சொல்வதையும் கேட்காமல் அவா் தனியாக ஒரு ஆட்சி நடத்துகிறாா். ஏனென்றால், பாஜக இங்கு நுழைய முடியவில்லை. அதனால், ஆளுநரைப் பயன்படுத்தி இந்த அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT