முகப்பு
கடலூர்

மகளிா் ஆயம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், முருகன்குடியில் மகளிா் ஆயம் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

ராமேசுவரத்தில் மீனவப் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய வட மாநிலத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், முருகன்குடியில் மகளிா் ஆயம் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் செயற்குழு உறுப்பினா் வே.தமிழ்மொழி தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் மா.மணிமாறன், மகளிா் ஆயம் பொதுச் செயலா் மு.செந்தமிழ்ச்செல்வி, பொருளாளா் ம.கனிமொழி, செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் பொறுப்பாளா் சிலம்புச்செல்வி, நிா்வாகிகள் தி.ஞானபிரகாசம், மு.தமிழ்மணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.