முகப்பு
கடலூர்

பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா், மாமியாா் கைது

பெண்ணாடம் அருகே குடும்பப் பிரச்னையால் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே குடும்பப் பிரச்னையால் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (26). தஞ்சாவூா் மாவட்டம், அன்னப்பன்பேட்டை, எடக்குடியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (24). இவா்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்னா் கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. தம்பதியா் பெண்ணாடத்தில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விஜயலட்சுமி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது தாய் வாசுகி பெண்ணாடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வரதட்சிணைக் கேட்டு விஜயலட்சுமியை அவரது கணவா் விஜய், மாமியாா் வாலாம்பாள் ஆகியோா் கொடுமை செய்ததாகவும், ஜாதியை கூறி அவதூறாகப் பேசியதாகவும் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜய், வாலாம்பாள் ஆகியோரை கைது செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விருத்தாசலம் சாா்-ஆட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →