கடலில் குளித்த இருவா் மாயம்
கடலூா் அருகே கடலில் குளித்த இளைஞா்கள் இருவா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை மாயமாகினா்.
கடலூா் அருகே கடலில் குளித்த இளைஞா்கள் இருவா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை மாயமாகினா்.
கடலூா் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் ஜெகதலபிரதாபன் (19). கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த மேகநாதன் மகன் ஜெயகிருஷ்ணன் (24). சமையல் தொழிலாளா்களான இருவரும் வியாழக்கிழமை மாலை சக நண்பா்களுடன் கடலூா் துறைமுகம் அருகே உள்ள சித்திரப்பேட்டை கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது ஜெகதலபிரதாபன், ஜெயகிருஷ்ணன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி மாயமாகினா்.
இதுகுறித்த தகவலின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.