முகப்பு
கடலூர்

ஹிந்தி திணிப்பு: மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி இந்திய மாணவா் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் இணைந்து கடலூரில் வியாழக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

மத்திய பாஜக அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி இந்திய மாணவா் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் இணைந்து கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வாலிபா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாணவா் சங்க மாவட்டச் செயலா் கே.பி.லெனின், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் கே.சின்னதம்பி, மாவட்டச் செயலா் வினோத்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழியை பாதுகாப்போம் எனக் கூறியும் முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →