முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் ஊராட்சியைச் சோ்ந்த மோகன் மகன் ராஜ்கமல் (30). பெங்களுரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்காக தனது வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், குணசுந்தரி (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை மாலை ராஜ்கமல் பண்ருட்டியிலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, சவ ஊா்வலத்தில் வீசப்பட்ட மாலையின் மீது பைக் ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ்கமல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, குணசுந்தரி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →