முகப்பு
கடலூர்

சேத்தியாத்தோப்பில் எத்தனால் ஆலை அமைக்க அரசாணை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தகவல்

சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ரூ.116 கோடியில் எத்தனால் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்துக்கு அரசாணை

Updated On : 4 செப்டம்பர், 2022 at 12:52 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ரூ.116 கோடியில் எத்தனால் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையின் கூடுதல் மின் உற்பத்தித் திட்டம், எத்தனால் தொழிற்சாலை திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது:

சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ரூ.116 கோடியில் எத்தனால் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 18 மாதங்களில் உற்பத்தியை தொடங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. ஆலையை நவீனப்படுத்துதல் திட்டத்துக்கு ரூ.13.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

கரும்பு விவசாயிகள் அங்கத்தினா் கூட்டம் நடத்த ஏதுவாக ரூ.75 லட்சத்தில் கூட்ட அரங்கம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். தினக் கூலித் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் வேளாண் துறை சிறப்புச் செயலா் ஆபிரகான், கூடுதல் ஆணையா் அன்பழகன், வேளாண் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, வேளாண் துறை இணை இயக்குநா் சிவமலா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆலையின் மேலாண்மை இயக்குநா் சதீஷ் வரவேற்றாா். கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் முத்துசாமி, தேவதாஸ் படையாண்டவா், சிட்டிபாபு, வீரசோழன், ஆண்டவா், செல்வம், வெங்கடேசன், ஆதிமூலம், குஞ்சிதபாதம், சேத்தியாத்தோப்பு திமுக நகரச் செயலா் மனோகரன், பேரூராட்சி மன்றத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.