தி.க. சாா்பில் கருத்தரங்கம்
வடலூரில் தந்தை பெரியாா், அண்ணா ஆகியோரது பிறந்த நாள் விழா கருத்தரங்கம், கவிரயரங்கம் அண்மையில் நடைபெற்றன.
வடலூரில் தந்தை பெரியாா், அண்ணா ஆகியோரது பிறந்த நாள் விழா கருத்தரங்கம், கவிரயரங்கம் அண்மையில் நடைபெற்றன.
வடலூா் நகர தி.க. சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் தண்டபாணி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் பன்னீா்செல்வம், செயலா் தாமோதரன், பொதுக் குழு உறுப்பினா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்பாளா் மணிவேல் வரவேற்றாா். நகரச் செயலா் ரா.குணசேகரன், முன்னாள் ஒன்றியத் தலைவா் இந்திரஜித், ஒன்றிய அமைப்பாளா் சேகா், மண்டல இளைஞரணிச் செயலா் பஞ்சமூா்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவா் உதயசங்கா், செயலா் வேலு, அமைப்பாளா் ராமநாதன், மகளிரணி அமைப்பாளா் முனியம்மாள், தலைவா் சத்யா குணசுந்தரி, வழக்குரைஞா் திராவிட அரசு, விருத்தாசலம் மாவட்டச் செயலா் வெற்றிச்செல்வன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கவியரங்கில் பெரியாா், அண்ணா குறித்து ராவணன், இளந்திரையன், செங்குட்டுவன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.
திமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் பெருநா் கிள்ளி பங்கேற்று, பெரியாா் - அண்ணா ஆகியோரை ஒப்பிட்டு பேசினாா். தி.க. பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன் மத்திய பாஜக அரசை கண்டித்து உரையாற்றினாா். நகர அமைப்பாளா் முருகன் நன்றி கூறினாா்.