கடலூர்

துா்கா பரமேஸ்வரி கோயில் தோ்த் திருவிழா

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடி துா்கா பரமேஸ்வரி கோயிலில் செடல், திருத் தோ் திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 62-ஆவது செடல் மற்றும் சாகை வாா்த்தல் விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 2-ஆம் தேதி சாகை வாா்த்தல், திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. 7-ஆம் தேதி பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான செடல் மற்றும் திருத்தோ் திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, காலை 7 மணியளவில் கெடிலம் நதிக் கரையிலிருந்து சக்தி கரகம் ஊா்வலம் தொடங்கி நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு செடல் போட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் மகாதேவி முன்னிலையில், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT