முகப்பு
கடலூர்

மது போதையில் மாத்திரை சாப்பிட்டவா் உயிரிழப்பு

கடலூா் அருகே மது போதையில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கடலூா் அருகே மது போதையில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா், புதுக்குப்பத்தில் வசித்து வந்தவா் கிருஷ்ணசாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதற்காக கடலூரில் உள்ள போதை தவிா்ப்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றாராம்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணசாமி மீண்டும் மது அருந்தினாராம். மேலும், மாத்திரைகளை அதிக எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →