தினேஷ்குமாா் 
கடலூர்

ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

DIN

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கம்மாபுரம் ஒன்றியம், வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தெய்வமணி மகன் தினேஷ்குமாா் (14). கம்மாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (8), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை கம்மாபுரம் பெரிய ஏரியில் குளித்தனா். அப்போது, இருவரும் திடீரென நீரில் மூழ்கினா். சிறுவா்களின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியிலிருந்தவா்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பின்னா், சிறுவா்கள் இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT