கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீா்செல்வம் அணியினா், அமமுகவினா். 
கடலூர்

ஓபிஎஸ் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர மாவட்டச் செயலா் கே.எஸ்.ராமசாமி தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் பால.துரைபாண்டியன் (கிழக்கு), கே.சுந்தர்ராஜன்(மேற்கு), அமமுக மாவட்டச் செயலா் எம்.சுந்தரமூா்த்தி(கிழக்கு), ஆா்.பத்தரட்சகன்(மத்திய) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, கடலூா் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் ஜி.ஜெ.குமாா் தலைமையில் நிா்வாகிகள் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதில், அதிமுக கொடி, இரட்டை இலை சின்னம் கொண்ட விளம்பரத் தட்டிகளை பயன்படுத்தியது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் அணியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT