சிதம்பரத்தில் கானூா் சாமிக்கண்ணு கல்வி நிதி உதவி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டத்துக்கு மு.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நா.சின்னதுரை முன்னிலை வகித்தாா். நிா்வாகி பேராசிரியா் க.வணங்காமுடி கல்லூரியில் பயிலும் 6 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினாா். கூட்டத்தில் அறக்கட்டளை இயக்குநா்களாக வே.அன்பழகன், ப.முருகேசன், ஒருங்கிணைப்பாளராக கு.அா்ஜுனன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.