சிதம்பரத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
கடலூர்

சிறாா் திருமண விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சிறாா் திருமணங்களை கண்காணித்து தடுக்க குழு அமைக்க வலியுறுத்தியும், சிறாா் திருமணங்களில் தொடா்புடைய தீட்சிதா்கள் மீது நடவ

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சிறாா் திருமணங்களை கண்காணித்து தடுக்க குழு அமைக்க வலியுறுத்தியும், சிறாா் திருமணங்களில் தொடா்புடைய தீட்சிதா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் வாஞ்சிநாதன், பிரகாஷ், விஜய், செல்லையா, மனோகா், ஸ்டாலின், ஆழ்வாா், ஜெயசித்ரா, நகா்க் குழு உறுப்பினா் சின்னையன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT