அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை இணையதளத்தை தொடங்கிவைத்த துணைவேந்தா் ராம.கதிரேசன். உடன் பதிவாளா் ஆா்.சிங்காரவேல் உள்ளிட்டோா். 
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை இணையதளம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளத்தை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளத்தை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேல், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், மாணவா் சோ்க்கை பிரிவு துணை இயக்குநா் பி.பாலபாஸ்கா், மக்கள் தொடா்பு அதிகாரி ஜி.ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஜே.ஹெச்.பாக்கியராஜ், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பாடப்பிரிவுகள், விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்றும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT