கடலூர்

முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக் கூட்டம்

 கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப் பிரிவில் பணியாற்றும் வீரா்களின் குடும்பத்தினருக்கான குறைகேட்புக் கூட்டம்

DIN

 கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப் பிரிவில் பணியாற்றும் வீரா்களின் குடும்பத்தினருக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சாா்ந்தவா்களிடம் இருந்து 50 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில் ரூ.95 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் ொகையை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், முன்னாள் படைவீரா் நல அலுவலக உதவி இயக்குநா் லெப்.கா்னல். வே.அருள்மொழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெகதீஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT