முகப்பு
கடலூர்

திட்டக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

திட்டக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். 

Updated On : 13 பிப்ரவரி, 2023 at 11:55 AM
விபத்தில் சிக்கிய கார்.
பகிர்:

திட்டக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னை சென்றுவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்ரோட்டில் கார் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து திடீரென கார் மீது மோதியது. 

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்த ராமநத்தம் போலீசார், வேப்பூர் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.