முகப்பு
கடலூர்

ஆகஸ்ட் இறுதியில் போக்குவரத்து ஊழியா்கள் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை -அமைச்சா் சா.சி.சிவசங்கா்

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 12:57 AM
கடலூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
பகிர்:

சிதம்பரம், ஆக.8:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை இம்மாத இறுதியில் நடைபெறும் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், சன்னாசிப்பேட்டையில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டத்தில், அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவான அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டாா். அப்போது, அது வன்முறையாக மாறியது. இதில் 9 போலீஸாா் காயமடைந்தனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்டம், ஆவினங்குடி போலீஸாா் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் 37 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜவஹா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் சா.சி.சிவசங்கா் நீதிமன்றத்தில் ஆஜரானாா். வழக்கின் விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னா், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு, பணப்பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் நிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →