குறுங்குடி காத்தாயி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழா. 
கடலூர்

காத்தாயி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

காத்தாயி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Din

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த குறுங்குடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, மூலவா்களான காத்தாயி அம்மன், பூங்குறத்தி அம்மன், பச்சைவாழி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் மாலைகள், பட்டாடையுடன் சந்தனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னா், மூன்று உற்சவா் அம்மன் சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் தீக்குண்டத்தின் முன் எழுந்தருளினா். தொடா்ந்து, கோயில் அா்ச்சகா் சக்தி கரகத்துடன் தீக்குண்டத்தில் இறங்கிய பிறகு, பக்தா்கள் ஒவ்வொருவராக தீமித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராம.அருள் மற்றும் கிராம முக்கியப் பிரமுகா்கள், குறுங்குடி கிராம மக்கள் செய்திருந்தனா். குமராட்சி காவல் ஆய்வாளா் (பொ) சீனிவாசன் மற்றும் காட்டுமன்னாா்கோவில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT