கடலூர்

இன்று நடக்கவிருந்த அண்ணாமலைப் பல்கலை தோ்வுகள் ஒத்திவைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (டிச. 2) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (டிச. 2) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) மு.பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (டிச. 2) நடைபெறுவதாக இருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தோ்வுகளுக்கான மறுதேதி பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம்? கல்வித் துறை விளக்கம்

ஜன.31-இல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: டிச.18 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT