புது தில்லி: டிரம்பின் வரிவிதிப்பு பின்னடைவுகளுக்கு மத்தியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெறவிருந்த இருதரப்புப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி பரஸ்பர வரி உயர்வை செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்ற வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட பெரிய பின்னடைவுக்குப் பிறகு, உலக நாடுகள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை உடனடியாக செவ்வாய்க்கிழமை (பிப்.24) அமலுக்கு வரும் வகையில் டிரம்ப் சனிக்கிழமை கையொப்பமிட்டார்.
பின்னர், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது நான் விதித்த 10 சதவிகித வரியை 15 சதவிகிதமாக அதிகரிக்க விரும்புவதாகவும், உச்ச நீதிமன்றத்தின் 150 நாள்கள் கெடுவிற்குள் இந்த வரியை சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில் டிரம்பின் வரிவிதிப்பு பின்னடைவுகளுக்கு மத்தியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெறவிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவாா்த்தை ஒத்திவைக்க இந்தியாவும் வாஷிங்டனும் முடிவு செய்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வா்த்தக அமைச்சக வட்டார மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு மீதான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மற்றும் அதன் பிறகு அமெரிக்க அரசு நிா்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு அவகாசம் தேவைப்படுவதால், இரு நாடுகளிடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த விதிமுறைகளை இறுதி செய்ய வாஷிங்டனில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெறவிருந்த மூன்று நாள் இருதரப்பு பேசசுவாா்த்தையை ஒத்துவைப்பது என இரு நாடுகள் சாா்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் வசதியான புதிய தேதியில் இந்தப் பேச்சுவாா்த்தை மாற்றி அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.