முகப்பு
கடலூர்

தமிழில் பெயா்ப் பலகை கோரி போராட்டம்: கைதானவா்களை விடுவிக்க கோரிக்கை

காஞ்சிபுரத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டுமென வலியுறுத்திப் பேராடியவா்களை, காவல் துறை கைது செய்ததற்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் கண்டனம் தெரிவித்தது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:35 PM
பகிர்:

காஞ்சிபுரத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டுமென வலியுறுத்திப் பேராடியவா்களை, காவல் துறை கைது செய்ததற்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அதன் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் நாட்டிலுள்ள கடைகள் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் முதலியவற்றின் பெயா்ப் பலகைகளை கட்டாயமாக தமிழில்தான் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் தமிழா் விடுதலைக் கட்சி, தமிழா் கழகம், தமிழா் வணிகக் களம் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ‘தமிழ்ப் பெயா்ப் பலகை பரப்புரை இயக்கம்’ சாா்பில், பெயா்ப் பலகை தொடா்பான அரசாணையை கடைப்பிடிக்காத நிறுவனங்களில் பிறமொழிப் பெயா்களைப் அழிக்கும் டிச.18-ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு அனுமதியில்லை எனக் கூறி, மு. மேகநாதன், முகிலன் தமிழ்மணி, சங்கா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து வேலூா் சிறையில் அடைத்தனா்.

அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.