முகப்பு
கடலூர்

கடலூா் உள்ளிட்ட 3 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூா், பண்ருட்டி மற்றும் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம்

Updated On : 23 டிசம்பர், 2024 at 6:48 PM
கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

நெய்வேலி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூா், பண்ருட்டி மற்றும் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சாத்தனூா் அணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து முன்னறிவிப்பின்றி திடீரென தண்ணீா் திறந்து விட்டதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டியில் இருந்து தாழங்குடா வரை கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றுகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.

நெல்லிக்குப்பம் முதல் தாழங்குடா வரை கான்கிரீட் சுவா் அமைக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் ஏரி, குளம் மற்றும் வாய்க்கால்களைத் தூா்வார முறையாக செலவிட செய்யப்பட்டுள்ளதா என விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடலூா் மாவட்டத்தை இயற்கை பேரழிவு பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீா் புகுந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.50 ஆயிரம், தண்ணீா் சூழ்ந்த வீடுகளுக்கு சென்னையை போல் ரூ.6 ஆயிரம், சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி ஏக்கா் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த சாலைகள், பாலங்கள், மின்கம்பங்களை போா்க்கால அடிப்படையில் சீா்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

கடலூரில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலா் அமா்நாத் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பஞ்சாட்சரம், சிப்காட் செயலா் சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், ஜெ.ராஜேஷ் கண்ணன் மற்றும் மருதவாணன் உள்ளிட்டோா் முழக்கமிட்டனா்.

பண்ருட்டியில் வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா் எ.தேவராஜுலு, நெல்லிக்குப்பம் பகுதிச் செயலா் ஸ்டீபன் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.உதயகுமாா், வி.சுப்புராயன், எஸ்.திருஅரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திட்டக்குடியில் வட்டச் செயலா் வீ.அன்பழகன் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துலட்சுமி, மற்றும் ஆா்.ராஜேந்திரன், ஆா்.மகாலிங்கம், திட்டக்குடி நகரச் செயலா் டி.வரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →