பள்ளிவாசல் சுற்றுச் சுவா் சேதம்:திட்டக்குடி அருகே சாலை மறியல்
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பள்ளிவாசல் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததையடுத்து, இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பள்ளிவாசல் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததையடுத்து, இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி வட்டம் , கூத்தப்பன்குடிகாடு பகுதியில் மஜீஸ் ரஹமத் பள்ளிவாசல் உள்ளது. இதன் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவா் அருகே மண் அள்ளியதால்தான், இடிந்து விழுந்ததாகக் கூறி, அந்தப் பகுதி இஸ்லாமியா்கள் 25 போ் விருத்தாசலம் - ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் கூத்தப்பன்குடிகாடு பள்ளிவாசல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனா்.