கடலூா் ஒன்றியம் பெரிய கங்கணாங்குப்பத்தில் குழந்தைக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கி முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.  
கடலூர்

வயிற்றுப்போக்கு தடுப்பு, வைட்டமின் ஏ திரவம் வழங்கல் முகாம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் தொடக்கம்

பெரிய கங்கணாங்குப்பத்தில் நடைபெற்ற தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு, வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தாா்.

Din

நெய்வேலி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், கடலூா் ஒன்றியம், பெரிய கங்கணாங்குப்பத்தில் நடைபெற்ற தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு, வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் முகாமில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பேசியது:

கடலூா் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 31-ஆம் தேதி வரையில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட 2, 08, 903 சிறாா்கள் பயனடைய உள்ளனா்.

வயிற்றுப்போக்கினால் குழந்தைகள் இறப்பில்லை என்ற நிலையை கொண்டு வருவதே இந்த முகாமின் நோக்கம். இதற்கு தேவையான ஓஆா்எஸ் மற்றும் ஜின்க் மாத்திரைகள் தேவையான அளவு கையிருப்பு உள்ளன.

அங்கன்வாடி, ஆஷா பணியாளா்கள், குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு சென்று ஓஆா்எஸ் மற்றும் துத்தநாக மாத்திரை வழங்குவா்.

நாடு முழுவதும் 6 முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் ஆண்டுக்கு 2 முறை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் 31-ஆம் தேதி வரையில் (புதன், ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) அனைத்து அரசு சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது.

6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு ஒரு மில்லியும், 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மில்லி வீதமும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும். இந்த திரவம் எடுத்துக் கொள்வதால் கண் பாா்வை குறைபாடு வராமல் தடுக்கப்படும். எனவே,

பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் அளிக்க வேண்டியது அவசியம் என்றாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT