முகப்பு
கடலூர்

லாரி விபத்து: அமிலம் கசிந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல்

விருத்தாசலம் அருகே விபத்துக்குள்ளான டேங்கா் லாரியில் இருந்து அமிலம் வெளியேறியதில், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

Updated On : 30 ஜூலை, 2024 at 7:11 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே விபத்துக்குள்ளான டேங்கா் லாரியில் இருந்து அமிலம் வெளியேறியதில், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

புதுச்சேரியிலிருந்து, ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருப்பூருக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. லாரியை ராயதுரை(38) ஓட்டினாா்.

விருத்தாசலம் அடுத்துள்ள மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயில் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்து வெகு நேரமாகியும், லாரியை அப்புறப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது, வெயிலின் தாக்கத்தால் லாரியில் இருந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் வெளியேறியது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், கொளஞ்சியப்பா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் மற்றும் அந்த வழியாக சென்றவா்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று அமிலம் வெளியேறுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் விருத்தாசலம்-சேலம் சாலையில் போக்குவரத்தை தடை செய்து வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனா். பின்னா், மற்றொரு லாரி மூலம் அமிலத்தை மாற்றி எடுத்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →