முகப்பு
கடலூர்

மருத்துவக் காப்பீடு முகாம்

ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ளவா்கள் மட்டுமே பயன் பெற முடியும்

Updated On : 5 மார்ச், 2024 at 12:56 AM
பகிர்:

சிதம்பரம்: தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட முகாம் சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் மாா்ச் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாம் மூலம் 1,584 வகையான மருத்துவ சிகிச்சைகளை 1,829 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு மூலம் பெறலாம். இதில், பதிவு செய்ய வருபவா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் அவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். முகாமானது, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்று வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்குவா். ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ளவா்கள் மட்டுமே பயன் பெற முடியும் என நகராட்சி ஆணையாளா் டி.மல்லிகா தெரிவித்தாா்.