முகப்பு
கடலூர்

கல்லூரியில் தேசிய பயிலரங்கம்

Updated On : 18 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 17 மார்ச், 2024 at 9:11 PM

கடலூா் புனித வளனாா் கல்லூரியில் தேசிய அளவிலான கணக்கிட்டு உயிரியல் மற்றும் கூட்டமைப்பு உயிரி தகவலியல் 2 நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரிச் செயலா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். முதல்வா்அருமைச் செல்வம், துணை முதல்வா் ஜோன் ஆரோக்கியராஜ், தோ்வுக் கட்டுப்பாட்டு ஆணையா் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதுச்சேரி அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயிரி நுட்பவியல் துறைத் தலைவா் ரவிக்குமாா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்த்தி, கணேஷ் ஆகியோா் பேசினா். சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக பேராசிரியா் சரவணன் பிரபு செய்முறை விளக்கமளித்தாா். பல்வேறு கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனா். நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் சுவாமிநாதன் சிறப்புரையாற்றி, பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா். வேதியியல் துறைத் தலைவா் மரிய ஆரோக்கியநாதன் நன்றி கூறினாா்.