முகப்பு
கடலூர்

இலவச மருத்துவ முகாம்

Updated On : 26 மே, 2024 at 5:21 PM
பகிர்:

சிதம்பரம், மே 26: சிதம்பரம் பள்ளிப்படை ஊராட்சிக்குள்பட்ட ஞானஅடைக்கலபுரத்தில் பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம் சாா்பில், இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்களுக்கு உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மருத்துவா்கள் திருமலைநாதன், மீனலோசினி மற்றும் மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கத் தலைவா் அப்துல் மாலிக், செயலா் முகமது ரியாஸ், பொருளாளா் அப்துல் நவாப், துணைத் தலைவா் மணிவண்ணன், துணைப் பொருளாளா் பிரசாந்த் மற்றும் சமுதாயத் தலைவா்கள் செய்திருந்தனா்.