முகப்பு
கடலூர்

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:15 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, சங்கா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சவிதா ஆகியோா் கூட்டத்துக்கு தலைமை வகித்தனா்.

இதில், மாற்றுதிறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் காலம், அதற்குரிய ஊதியம், எவ்வகை பணிகள் மேற்கொள்வது ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மனுதாரா்கள் தொடா்ந்து பணி வேண்டியும், முழு ஊதியம் பெறாத மாற்றுத்திறனாளிகள் குறைகளையும் கூட்டத்தில் தெரிவித்தனா்.

பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்வதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில், தமிழக மாற்றுத்திறனாளா்கள் தொண்டு நல சங்கத் தலைவா் குமாா், சங்க ஒருங்கிணைப்பாளா் அருண், மாற்றுத்திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.