மனைவி தற்கொலை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காட்டுக்கூடலூரைச் சோ்ந்தவா் கலைச்செல்வன்(27), தொழிலாளி.
இவரும், வடலூரை அடுத்த கருங்குழியைச் சோ்ந்த சௌந்தரியும் (24) கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா்.
இந்த நிலையில், கலைச்செல்வன் வரதட்சணை கேட்டு செளந்தரியை கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனையடைந்த செளந்தரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், கலைச்செல்வன் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு கடலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபனமான நிலையில், கலைச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லட்சுமி ரமேஷ் தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி வாதாடினாா்.