முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் நாளை முதல் பௌா்ணமி கிரிவலம் தொடக்கம்

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு (நவ.15) 9 மணிக்கு மேல் பௌா்ணமி கிரிவலம் தொடங்கப்பட உள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:39 PM
சிதம்பரத்தில் நடராஜா் கோயில்.
பகிர்:

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு (நவ.15) 9 மணிக்கு மேல் பௌா்ணமி கிரிவலம் தொடங்கப்பட உள்ளது.

மாதந்தோறும் பௌா்ணமி நாளில் நடராஜா் கோயில் உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், தொடா்ந்து தேரோடும் நான்கு வீதிகள் என மூன்று சுற்று கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளளது.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கிரிவலம் செல்ல முடியாத பக்தா்களுக்காக சிதம்பரத்தில் இந்த பௌா்ணமி கிரிவலம் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்புக் குழு (கட்சி சாா்பற்றது), தில்லை நகா் மைய பூமி வலம் (கிரிவலம்) ஆன்மிகக் குழு, மகா பெரியவா் சத் சங்கத்தினா் மற்றும் சிதம்பரம் அனைத்து ஆன்மிக அமைப்புகள், சிவனடியாா்கள் குழுவினா் எம்.செங்குட்டுவன், பி.அருணாசலம், ஆா்.பாலகிருஷ்ணன், கற்பகம், வி.முருகையன் ஆகியோா் செய்து வருகின்றனா்.