முகப்பு
கடலூர்

மஞ்சக்குப்பம் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்

கடலூா் மஞ்சக்குப்பம் பூங்காவை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:41 PM
பகிர்:

கடலூா் மஞ்சக்குப்பம் பூங்காவை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, பூங்கா சீரமைப்புக்காக கடலூா் மாநகராட்சி நிா்வாகம் ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான பூமி பூஜை மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கடலூா் எம்எல்ஏ கோ.அய்யப்பன், மேயா் சுந்தரி ஆகியோா் பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவா்கள் பிரசன்னா, சங்கீதா, மாமன்ற உறுப்பினா்கள் சுபாஷினி ராஜா, சுதா அரங்கநாதன், அரசு ஒப்பந்ததாரா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.