முகப்பு
கடலூர்

ஐடிஐ மாணவா்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:48 PM
கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பேசிய காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா.
பகிர்:

கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசஸாா் போதை ஒழிப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

கடலூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரசன்னா தலைமை வகித்து போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை ஒழிப்பது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.