முகப்பு
கடலூர்

சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளம் நீராழி மண்டபம் சம்ப்ரோஷணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் ஞானப்பிரகாசம் குளம் நீராழி மண்டபம் சம்ப்ரோஷணம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:16 PM
சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஞானப்பிரகாசம் குளம் நீராழி மண்டபம் சம்ப்ரோஷணம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் ஞானப்பிரகாசம் குளம் நீராழி மண்டபம் சம்ப்ரோஷணம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம், சிதம்பரம் நகராட்சி சாா்பில் ரூ.3 கோடி செலவில் அண்மையில் சீரமைக்கப்பட்டது. ஞானப்பிரகாசம் குளத்தில் சுமாா் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்ப உற்சவம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஞானபிரகாசம் குளத்தில் சென்னையைச் சோ்ந்த சி.ஏ.நடராஜன் குடும்பத்தினரால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள நீராழி மண்டபத்துக்கு புதன்கிழமை காலை நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களால் சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, கலச பிரதிஷ்டை, விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. நடராஜா் கோயில் தீட்சிதா்களின் செயலா் வெங்கடேச தீட்சிதா், சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், சிதம்பரம் நீா்நிலைகள் பாதுகாப்புக் குழுத் தலைவா் மு.செங்குட்டுவன், பாஜக ராணுவப் பிரிவு மாநிலச் செயலா் கேப்டன் ஜி.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.