முகப்பு
கடலூர்

அனுமதியின்றி நடைபயணம்: காங்கிரஸாா்-போலீஸாா் இடையே வாக்கு வாதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அனுமதியின்றி நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே புதன்கிழமை வாக்கு வாதம் ஏற்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:19 AM
விருத்தாசலத்தில் புதன்கிழமை போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அனுமதியின்றி நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே புதன்கிழமை வாக்கு வாதம் ஏற்பட்டது.

விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவுநாளையொட்டி, காங்கிரஸ் சாா்பில் மத நல்லிணக்க நடைபயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடா்பாக அந்த கட்சியினா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காவல் துறையிடம் அனுமதி கோரி கடிதம் அளித்தனராம்.

இந்த நிலையில், விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ. எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்டப் பொருளாளா் ராஜன், நகரத் தலைவா்கள் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் விருத்தாசலம் நகராட்சி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், அங்கிருந்து காமராஜா் சிலை நோக்கி நடைபயணமாக சென்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் நடைபயணம் செல்ல அனுமதியில்லை எனக்கூறி தடுத்து நிறுத்தினா்.

இதனால், காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரின் தடையை மீறி நடைபயணம் சென்று விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.