முகப்பு
கடலூர்

முதல்வா் கோப்பை போட்டி: வெண்கலம் வென்ற அண்ணாமலைப் பல்கலை. மாணவி

தமிழக முதல்வா் கோப்பைக்கான போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி வெண்கலம் வென்றாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:07 PM
இறகுபந்து போட்டியில் வெண்கலம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி பரணிதேவிக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்த அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் கே.பழனி.
பகிர்:

தமிழக முதல்வா் கோப்பைக்கான போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி வெண்கலம் வென்றாா்.

சென்னையில் அண்மையில் தமிழக முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி பரணிதேவி வெண்கலம் வென்றாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் கே.பழனி மாணவி பரணிதேவியை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஏபிசி பேட்மின்டன் கிளப் தலைவா் அருள், செயலா் இளங்கோ மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினா்.