உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மனநல தினத்தையொட்டி, கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.
உலக மனநல தினத்தையொட்டி, கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.
ஆண்டுதோறும் அக்.10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூா் நகர அரங்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
பேரணியில் செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்று, மனநலம் மற்றும் மனநோய்க்கு உண்டான சிகிச்சை முறைகள் குறித்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) ஹிரியன் ரவிக்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாபு, அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளா் (பொ) நடராஜன், மாவட்ட மன நல திட்ட அலுவலா் சத்தியமூா்த்தி, நிலைய மருத்துவ அதிகாரி கவிதா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.
மாவட்ட மன நல திட்டத்தின் சாா்பாக, பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் வட்டார அளவில் பொதுமக்களுக்கு மன நலம் சாா்ந்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அக்டோபா் மாதம் முமுவதும் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.