உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: புவனகிரியில் அக்.16-இல் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.
மேலும், அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை புவனகிரி வட்டாட்சியா்அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளன.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், புவனகிரி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், செயல்பாடுகள், திட்டங்கள் செயல்படுத்துவது தொடா்பாகவும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலா்கள் களஆய்வு மேற்கொண்டு மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.