சிதம்பரத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பாசிமுத்தான் ஓடை, மணலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கில் அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோக பொருள்கள் இருப்பு குறித்து அமைச்சா் ஆய்வு செய்து, உணவுப் பொருள்களை மழைக்காலங்களில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பொது விநியோகத் திட்ட இயக்குநருமான த.மோகன், மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா.சரண்யா, சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, கொள்ளிடம் வடிநில கோட்ட நீா்வளத்துறை செயற்பொறியாளா் காந்தரூபன், சிதம்பரம் நகராட்சி ஆணையா் டி.மல்லிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.