முகப்பு
கடலூர்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை: விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை குறித்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 7:50 PM
காட்டுமன்னாா்கோவில் அருகே புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜி.கஜலட்சுமி. உடன் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, வட்டாட்சியா் சிவக்குமாா்.
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை குறித்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜி.கஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூா், மயிலாடுதுறை மாவட்டம், குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றை இணைப்பதற்கான கடந்த 2019-ஆம் ஆண்டு சுமாா் ரூ.497 கோடியில் மதகுகளுடன் கூடிய கதவணை கட்டப்பட்டது. தற்போது இந்த அணை கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் முதல்வரால் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சாா்பில் அணை குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஆயங்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு திட்ட செயற்பொறியாளா் பாலமுருகன், வட்டாட்சியா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், கிராம நிா்வாக அலுவலா் முத்து மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், சுமாா் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.