முகப்பு
கடலூர்

நவ.22-இல் ஓய்வூதியா்களுக்கான குறைகேட்புக் கூட்டம்

கடலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வரும் நவம்பா் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:18 PM
பகிர்:

கடலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வரும் நவம்பா் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்களின் குறைகேட்புக் கூட்டம் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் நவம்பா் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில், சென்னை அரசு கூடுதல் செயலா் மற்றும் ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்கள் தங்களது கோரிக்கைகளை இரண்டு பிரதிகளில் ‘ஓய்வூதியா்கள் குறைதீா்க்கும் நாள் மனு’ எனக் குறிப்பிட்டு, வரும் 30-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.