முகப்பு
கடலூர்

தீபாவளி: இனிப்புக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தீபாவளி பண்டிகையையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள இனிப்பு மற்றும் பலகாரக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:00 PM
விருத்தாசலத்தில் உள்ள இனிப்புக் கடையில் திங்கள்கிழமை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி.
பகிர்:

நெய்வேலி: தீபாவளி பண்டிகையையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள இனிப்பு மற்றும் பலகாரக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள இனிப்பு மற்றும் பலகாரக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இனிப்பு மற்றும் பலகாரங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்கள் சோ்க்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு அலுவலா் நல்லதம்பி தலைமையிலான குழுவினா் விருத்தாசலம் பகுதியில் ஆய்வு செய்தனா்.

அப்போது, பணியாளா்கள் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியாளா்கள் அனைவரும் கையுறை, தலைமுடி கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளின் மீது, உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →