கடலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

சிதம்பரம்: சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியும் 18 துப்புரவுப் பணியாளா்கள், வல்லம்படுகை ஊராட்சியைச் சோ்ந்த 15 துப்புரவுப் பணியாளா்கள், உசுப்பூரைச் சோ்ந்த 14 துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நகா் மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன் பங்கேற்றாா்.

இதில், அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை பேராசிரியா் பி.ஆஷா, தலைமையாசிரியா் ஸ்ரீதா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின் முடிவில் எஸ்.காா்த்திக் ராஜா நன்றி கூறினாா்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT