கொளஞ்சியப்பா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.28 லட்சம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.22.28 லட்சம் வசூலானது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.22.28 லட்சம் வசூலானது.
இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 15.500 கிராம் தங்கம், 2.56 கிலோ வெள்ளி மற்றும் ரூ.22 லட்சத்து 28 ஆயிரத்து 490-ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் செயல் அலுவலா் பழனியம்மாள், ஆய்வாளா் கோவிந்தசாமி மற்றும் செல்வகுமாரி, கோயில் பணியாளா்கள், பக்தா்கள் ஈடுபட்டனா்.