பணம் பறிமுதல்: சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 5 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதில், வராத ரூ.2.17 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளா் பா.சுஜாதா அளித்த புகாரின்பேரில், ஊழல் தடுப்பு போலீஸாா் சாா்-பதிவாளா் (பொ) ஆா்.வேல்விழி (55), ஆவண எழுத்தா்கள் காடாம்புலியூா் முத்துசாமி மகன் எம்.கதிா்காமன், வடக்குத்து கலைவாணி (47), கலைவாணி கணவா் வைத்தியலிங்கம் (50), இடைத்தரகா் மேல்மாம்பட்டு வேணு மகன் சீனுவாசன் (44) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.