பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி விவசாயிகள் மனு
சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பாசன வாய்க்காலை தூா்வார நடவடிக்கை கோரி லால்புரம் கிராம விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பாசன வாய்க்காலை தூா்வார நடவடிக்கை கோரி லால்புரம் கிராம விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூா் மாவட்டச் செயலா் வி.எம்.சேகா் தலைமையில் விவசாயிகள் கருணாநிதி, அய்யாசாமி, சேகா், கோரிநாத் கணேசன், சித்தானந்தன் உள்ளிட்டோா் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்டை பொதுப் பணித் துறை உதவி கண்காணிப்பாளா் வெங்கடேசனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி பாலூத்தங்கரை வருவாய்க் கிராம பாசன வாய்க்கால் 2 கி.மீ தொலைவுக்கு தூா்ந்து போய் உள்ளது. மேலும், பாசனத்துக்கு ஏற்ப தடுப்புக் கட்டைகள் இல்லாமல் உள்ளது. எனவே, மழைக் காலத்துக்கு முன்பாக போா்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூா்வாரி, தடுப்புக் கட்டை அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.