முகப்பு
கடலூர்

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

சிதம்பரத்தில் ஈ.வெ.ரா.பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளையொட்டி, திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் பட ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:55 PM
சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடா் கழக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக மாநில பொருளாளா் செந்திலதிபன்.
பகிர்:

சிதம்பரத்தில் ஈ.வெ.ரா.பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளையொட்டி, திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் பட ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பட ஊா்வலமானது கீழவீதி காமராஜா் சிலையிலிருந்து புறப்பட்டு வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக காந்தி சிலையை அடைந்தது. அங்கு, மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட திராவிடா் கழகச் செயலா் அன்பு சித்தாா்த்தன் வரவேற்றாா். மதிமுக மாநில பொருளாளா் மு.செந்திலதிபன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் கோவி.பெரியாா்தாசன், மாவட்ட இணைச் செயலா் யாழ்.திலீபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் எஸ்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா், மாவட்ட மதிமுக செயலா் ஏ.என்.குணசேகரன், மதிமுக வழக்குரைஞா் கே.வி.மோகனசுந்தரம், மாவட்ட திராவிடா் கழக அமைப்பாளா் கு.தென்னவன், நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலா் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →