கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.  
புதுக்கோட்டை

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு பொதுக்கூட்டம்

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டு சாதனை விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ. ராமையன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் எஸ். நாராயணசாமி, வடக்கு ஒன்றிய செயலா் ஜி. பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் த. அன்பழகன் வரவேற்றாா்.

கட்சியின் மாநில செயலா் பெ. சண்முகம் 5 ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.

முன்னதாக பெ. சண்முகம் சட்டப்பேரவை உறுப்பினா் பணி குறித்த ஓயாத உழைப்பில் ஐந்தாண்டுகள் என்ற புத்தகத்தை வெளியிட்டாா். நிகழ்வில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் , மாநில செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, டி.சலோமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட குழு உறுப்பினா் வி. ரெத்தினவேல் நன்றி கூறினாா்.

போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

விபத்தில் கால்களை இழந்த வேலூா் விளையாட்டு வீரருக்கு அரசுப்பணி!

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

SCROLL FOR NEXT