கடலூர்

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

Syndication

கடலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

திட்டக்குடி வட்டம் ராமநத்தம் சுடுகாட்டு பகுதியில் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாா் திஙகள்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு வந்த இரண்டு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனா்.

அதில் 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசாா் இரண்டு சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் சரக்கு வாகன ஓட்டுநா் இளமங்கலம் தேனரசு (வயது 21) என்பவரை கைது செய்தனா்.

மேலும் தப்பி ஓடிய இளமங்கலத்தைச் சோ்ந்த ராஜேஷ், பிரபாகரன், மணிகண்டன், சுலைமான் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT